Tuesday, November 7, 2017

16ஆயிரம் கோடி தானா?

Nov 08,2017
பண நீக்கம் முடக்கியது 16 ஆயிரம் கோடி ருபாய் மட்டும் தானா?

பண நீக்கம் (demonetisation) அமல் படுத்தப்பட்டு ஒர் ஆண்டு ஆகிறது. ரூபாய்   15.44  லட்சம் கோடி ரொக்கம் முடக்கியதில்     ஜூன் 30,2017ஆம் தேதி வரை 15.28  லட்சம் கோடி வங்கிகளில் வரவாகி விட்டதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார். இதன்படி பண நீக்க நடவடிக்கை முடக்கியது  ருபாய் 1 6  ஆயிரம் கோடி மட்டும்தான்.
பண நீக்க நடவடிக்கை அறிவித்தபோது அனைவரும் எதிர் பார்த்தது ஒரு   லட்சம் கோடியாவது முடங்கும் என்பது. அரசு மறுத்தாலும் , ஒரு சிறப்பான தொகை முடங்கும் அது பற்றாக்குறை பட்ஜெட்டை ஓரளவு சரி கட்டும்  என்ற எண்ணம் அவர்கட்கு நிச்சயம் இருந்தது. இது பொய்த்துள்ளது. ஒரு பெரிய ஏமாற்றம்தான் .
மக்களில் சிலர் பழைய பணத்தை மாற்ற முடியாமல் கவலை தெரிவித்துள்ளனர். செய்திகளில் மதிப்பிழந்த பணம் பெரும் தொகைகள் பல்வேறு இடங்களில்  கை பெற்றப்பட்டதை  படித்துள்ளோம்.
கண்கட்கு தெரிவதை விட இதில் ஏதும் மறைந்துள்ளதா? வந்த பணம் கள்ள நோட்டுகள் உள்ளடங்கியதா?  வராத பணத்தில் ஆயிரம் நோட்டுக்கள் எத்தனை ஐநூறு நோட்டுக்கள் எத்தனை. திரு P சிதம்பரம் போன வருடம் கூறுகையில் வங்கியில் திரும்பி வரும் பணம் புழக்கத்தில் உள்ளதை விடவும் கூடுதலா யிருக்கும் என்றார். அது ஏறத்தாழ பலித்துள்ளது.
ரிசெர்வ் பாங்க் நோட்டுகளை எண்ணி வருகிறது. அந்த பணி முடிந்தால் சற்று தெளிவாகலாம்.